spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

-

- Advertisement -

சென்னை நொளம்பூரில் 10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நொளம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கீர்த்தனா இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது 10 வயதாகும் குழந்தை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

we-r-hiring

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் தம்பதி கீர்த்தனா இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பெண் குழந்தையை ரமேஷிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் கீர்த்தனா.

இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனா என்ற விதவை பெண்ணை(இரண்டாவது மனைவியின் பெயரும் கீர்த்தனா) இரண்டாவதாக ரமேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரமேஷின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை சொல் பேச்சு கேட்கவில்லை எனக்கூறி இரண்டாவது மனைவி கீர்த்தனா அவரை தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பூரிக்கட்டையாலும், கரண்டியாலும் பெண் குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கை விரல்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று இரவு 10 வயது பெண் குழந்தையை காணவில்லை என ரமேஷ் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முகப்பேர் மேற்கு சர்வீஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.

உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் குழந்தையை சேர்த்தனர். இது தொடர்பாக சைல்டு ஹெல்ப்லைனுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும், நேற்று இரவு 11 மணிக்கு வந்த சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் குழந்தையை பார்த்து அதன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

நடந்த கொடுமைகள் குறித்து குழந்தையிடமும் விசாரித்தனர். பின்னர் குழந்தையின் தந்தை ரமேஷ், சித்தி கீர்த்தனா இருவரிடமும் விசாரணை நடத்தி விட்டு நள்ளிரவு 12:30 மணிக்கு சென்றனர்.

சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் கொடுக்கும் புகாரியின் அடிப்படையில் கொடூர புத்தி கொண்ட சித்தி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

MUST READ