நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேப்பாளத்தை போல போடாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக காவல்துறை குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனா்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த மாநாடு நிறைவடையவுள்ள நிலையில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மாலை இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாநாட்டு திடலுக்குள் சென்று அவர்கள் அணிந்திருந்த டீ-சர்ட் கழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ‘அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தங்கள்’ குறித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார் மற்றும் நரசிம்ம யாதவ் ஆகியோர் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 5 நாட்கள் விசாரணை காவல் வழங்க வேண்டும் எனவும் , இந்த நிகழ்வுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளதாகவும் குறிப்பாக சமீபத்தில் நேபாளத்தில் நடத்திய போராட்டத்தை போல் இங்கு நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் இந்த நிகழ்வின் போது 3 காவல்துறையினர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பு ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் 4 பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது என தெரிவித்தனர். மேலும் 4 பேரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எனவே மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு கூடுதலாக 5 நாட்கள் விசாரணை காவல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது. நேற்று மாநாட்டு திருடர்கள் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அரசியல் சதி காரணமாக சிறையில் அடைக்கத் திட்டமிடுவதாக குற்றம் சாட்டினர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் படித்த இளைஞர்கள் என்பதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளவர்கள். எனவே அரசியல் சதிக்காக அவர்கள் பலியாக கூடாது என வாதம் முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தரவை ஒத்திவைத்துள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு


