இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூா் நகாில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கபாலீஸ்வரா் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; “உங்களுக்கு இது பிப்ரவரி மாதம்; திமுகவுக்கு இது மாநாடு மாதம்; இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக திராவிட மாடல் அரசு உள்ளது. பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்து வருகிறேன். கல்விதான் கடவுள்; கல்வி எனும் கடவுள் மாணவர்களுக்கு எல்லாம் கொடுக்கும்; படிங்க, படிங்க அதுதான் உங்களை உயர்த்தும். தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடக்காத வகையில் முன்னேற்ற பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்தில் 5 தலைமுறை உயரும். பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கினோம். ஆண்களுக்கும் கல்வியை ஊக்குவிக்க தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். மாணவா்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு சோ்க்க இலவச மடிக்கணினி கொடுத்துள்ளோம். மாணவா்கள் பசியில்லாமல் படிக்க காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தோம். மூச்சு இறைக்கும் அளவுக்கு நாம் நிறைவேற்றிய திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் இதுதான் திராவிட மாடல் அரசு“ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளாா்.
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…



