spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுறநகர் ரயில் சேவை குளறுபடி - பயணிகள் தவிப்பு

புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு

-

- Advertisement -

எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.புறநகர் ரயில் சேவை குளறுபடி - பயணிகள் தவிப்பு

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான ரயில்களும் திட்டமிடல் இன்றி இயக்கப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

we-r-hiring

“சென்னை எழும்பூர்” என அறிவிக்கப்பட்டு வந்த ரயில் தாம்பரத்தில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எழும்பூர் வரை செல்லும் என எதிர்பார்த்த பயணிகள், தாம்பரத்திலேயே இறக்கப்பட்டனர். அதே சமயம், மற்றொரு ரயில் வேறு நடைமேடையில் நின்றிருந்ததால் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு அவசரமாக ஓடி ரயிலை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், 1 மற்றும் 2வது நடைமேடைகளில் பயணிகள் காத்திருக்கும்போது, முன்னறிவிப்பின்றி 3 மற்றும் 4வது நடைமேடைகளில் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ‘கட் சர்வீஸ்’ ரயில்கள் எந்த நடைமேடையிலிருந்து எந்த நிலையம் வரை இயக்கப்படும் என்ற தகவலும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பல ரயில்கள் காலியாகச் செல்வதுடன், பயணிகள் தவிப்பும் அதிகரித்துள்ளது.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறையில் அமலாகவில்லை என்றும், சில நேரங்களில் 40 நிமிடங்கள் வரை ரயில் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை, இடையிடையே நிறுத்தி இரண்டு மணி நேரமாக நீட்டித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்கள் குறைந்த இடைவெளியில் இயக்கப்படாததால் கூட்ட நெரிசல் அதிகரித்து, பலர் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவது அவசியமானதாயினும், முன்கூட்டிய திட்டமிடல் மற்றும் தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சேவையை சீர்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு

MUST READ