spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

-

- Advertisement -

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்படும் 17c படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

we-r-hiring

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை (பிப்.26)  சென்னை வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காலை அங்கீகரிக்கப் பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ், பாஜக, பிஎஸ்பி, ஆம் ஆத்மி, சிபிஎம், தேசிய மக்கள் கட்சி, திமுக, அதிமுக, தேமுதிக, விசிக, நாம் தமிழர், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு அளிக்கப்படும் 17சி படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள திருவிழாக்களை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை இறுதி செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வசீகரன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, பாஜக சார்பில் காரத்தே தியாகராஜன், சிபிஎம்  பெ.சண்முகம் ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

மாலை 38 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், 38 மாவட்ட எஸ் பிக்கள், சரக டிஐஜிகள், 4 மண்டல ஐஜிகள், மாநகர காவல் ஆணையர்களுடன் தேர்தல் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை, தளவாடங்கள், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி, பறிமுதல் நடவடிக்கைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் (பிப். 26)  காலை வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை முகமைகள், ரெயில்வே, துணை ராணுவம், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்துறை போன்ற 23 துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவான விளக்கத்தை தேர்தல் ஆனையம் வழங்க உள்ளது.

சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…

MUST READ