ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு வர அவா்களது உறவினர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக ஈரான் நாட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது அங்கு நடைபெறும் பதட்டமான போர் சூழ்நிலை காரணமாக அவர்கள் கடலில் இருந்தபடியே உயிர் அச்சத்துடன் இருப்பதாகவும் தொலைபேசி மூலம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். கடலில் இருந்து பாதுகாப்பாக கரைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவை சில நாட்களில் தீர்ந்து போகும் அபாய சூழல் இருப்பதாகவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
போர் பதற்றம் காரணமாக கடும் மன அழுத்தம் மற்றும் மரண பயத்தில் தங்களது உறவினர்கள் ஈரானில் சிக்கி உள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய அரசு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு நிலையை உறுதி செய்து அவர்களை சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…



