திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.
திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால், கிாிஷ் சோடங்கா், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் அடங்கிய குழு அறிவாலயம் சென்றது. திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.
மேலும், காங்கிரஸ், திமுக காங்கிரஸ் தொகுதி உடன்பாடு கையெழுத்தாவதால் திமுக கூட்டணியில் விாிசல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணி சிதறிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து கூறி வந்தாா். தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவா்கள், ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட தவெகவினரும் திமுக கூட்டணி உடையும் என பேசி வந்தனா்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 28 தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தோ்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 4 தோ்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை


