Homeசெய்திகள்தமிழ்நாடுகவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

-

- Advertisement -

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.கவிஞா் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பினை வழங்குவோருக்கு 1961 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த உயரிய விருது கவிப் பேரரசு வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன், “நெடிய பரம்பரை கொண்ட தமிழ் இலக்கியத்துக்கு 3வது முறையாக ஞான பீட விருது கிடைத்துள்ளது. கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு பெரும் பெருமையைச் சோ்த்திருக்கிறாா் என் ஆப்தா் கவிப்பேரரசு வைரமுத்து. என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்“ என மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன் தெரிவித்துள்ளாா்.

”இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” – வைரமுத்து

we-r-hiring

MUST READ