திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்கப்படுவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் மாவட்ட வழங்கல் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் நேற்று சோதனை நடத்தினார். அப்போது உரிமையாளர் நீண்ட நேரமாக ஏஜென்சிக்கு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
மேலும், அதிகாரிகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக கடைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். அப்போதும் தாமதப்படுத்தியுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள், கேஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து சிலிண்டர்களை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

