Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் - விக்ரம ராஜா...

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் – விக்ரம ராஜா பேட்டி

-

- Advertisement -

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தவெக கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும், வணிகர் சங்கம் வழங்கிய கோரிக்கைகள் எதுவும் அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றதாக தெரியவில்லை – அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே இந்த தேர்தலில் எங்களது ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கரூரில் பேட்டியளித்துள்ளாா்.அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் - விக்ரம ராஜா பேட்டிவருகின்ற மே 5ஆம் தேதி திருவாரூரில் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, கரூரில் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கரூர் தனியார் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

திருவாரூரில் மே 5ஆம் தேதி நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டிற்கு கரூரிலிருந்து 5000 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்தல் என்றால் திருவிழா என்று சொல்வார்கள். ஆனால், வணிகர்களுக்கு தேர்தல் என்பது இருட்டு நாளாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் சிறு வணிகர்களை குறி வைத்து தாக்கும் சூழ்நிலை இருக்கிறது. கரூரில் நேற்று அரிசி வியாபாரி ஒருவரிடம் 1.15 லட்சம் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிறிய எழுத்துப் பிழையை காரணம் காட்டி அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

தேர்தல் ஆணையம் வணிகர்கள் மீது அத்துமீறல் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி கீழ்மட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டும். வணிகர்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து வருகின்ற 31 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வணிகர்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றால் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.

அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வணிகர் சங்கங்களின் கோரிக்கையை தெரிவித்திருக்கிறோம். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பொறுத்து, வணிகர் சங்கங்களின் ஆதரவு இருக்கும். அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எங்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த அம்சங்கள் அடங்கியுள்ளதாக இதுவரை தெரியவில்லை.

கரூர் துயர சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையில், விஜய் மீது புகார் மனு வழங்கியதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது. கரூரில் நடந்த துயரத்திற்கு அவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு செய்யும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில் அதற்கும் தயாராக இருக்கிறோம் என விக்ரம ராஜா தெரிவித்துள்ளாா்.

தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து

MUST READ