2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) தலைவர் ஜான் பாண்டியன், இந்தத் தேர்தலில் பாஜகவின் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், தனது கட்சி இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணியின் பிரதான கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்திலேயே களம் காண உள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் அக்கட்சி பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் களம் காணப்போகும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை (மார்ச் 29) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஜான் பாண்டியன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் மற்றும் எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது பொதுத் தொகுதியான ராஜபாளையத்தில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தனது வெற்றியை உறுதி செய்யப்போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தென் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்
