Homeசெய்திகள்தேர்தல் 2026அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

-

- Advertisement -

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு “பிரஷர் குக்கர்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக, மொத்தம் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளதுடன், விரைவில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

we-r-hiring

மேலும், 120 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் தினகரன் வெளியிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த தேர்தலில் அவர் நேரடியாக போட்டியிடவில்லை.

அமமுகவுக்கு “பிரஷர் குக்கர்” சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என்று தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாகவும் இதே சின்னத்தில் அமமுக போட்டியிட்டதால், “குக்கர்” சின்னம் மக்களிடம் ஏற்கனவே பரிச்சயமானதாக உள்ளது. இதனால், கூட்டணியில் உள்ள அமமுகவுக்கு தேர்தலில் சாதகமான நிலை உருவாகும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்

MUST READ