இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். விருதுநகரில் விஜய பிரபாகரனை ஆதரித்து ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம் தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6ம் தேதி விருத்தாசலம், 10-ம் தேதி தருமபுரி, 11-ம் தேதி ஓமலூர், 12-ம் தேதி சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் முறையே கிருஷ்ண மூர்த்தி, அனகை முருகேசன், பிரதாப், சரவணன், வெங்கடேசன், ஏ.ஆர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்கிறார்.
13, 14-ல் மீண்டும் விருத்தாசலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரேமலதா, 15-ம் தேதி சென்னை சட்டமன்ற தொகுதியிலும், 16, 17-ல் விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்தும், 18 முதல் 21-ம் தேதி வரை மீண்டும் விருத்தாசலத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

