Homeசெய்திகள்சென்னைதிமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

-

- Advertisement -

வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவுஇது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு என்பதற்கான அறிவிப்பை இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் துணைத் தலைவர் முனீர், பொதுச் செயலாளர் முகமது ஷிப்லி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட அணிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தும் மக்கள் விரோத கொள்கைகளை தமிழ்நாட்டில் திணிக்கும் பாஜகவுடன் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பை தெரிவித்தும், திமுக கூட்டணியை ஆதரிப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அறிவித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களை அவ்வமைப்பினர் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

MUST READ