Homeசெய்திகள்அரசியல்ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

-

- Advertisement -

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவரது தந்தை ஊர்வசி டி.செல்வராஜ் ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 2006 முதல் 2009 வரை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர். அவரது திடீர் மறைவுக்கு பிறகு ஊர்வசி அமிர்தராஜ் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

we-r-hiring

காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வரும் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், ஓபிசி பிரிவு அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறார்.

42 வயதாகும் இவர், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர். பிடெக், எம்பிஏ படித்துள்ளார். இவருக்கு ஜெமிமா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். தொழிலதிபரான ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார் – காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

MUST READ