Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் - வி.சி.அசோகன்

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

-

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தட்டுப்பாடு இல்லாமலும், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் அசோகன் பேட்டியளித்தார்.எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் - வி.சி.அசோகன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனரும், தமிழ்நாடு தலைவருமான வி.சி.அசோகன் செய்தியாளர்களை சந்தித்து, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியன் ஆயில் மற்றும் இதர பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், போதிய அளவில் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் நிரப்பும் ஆலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் விநியோக அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களது எல்பிஜி சிலிண்டர்களை வழக்கமான சுழற்சியில் எவ்வித சிரமமும் இன்றிப் பெற முடிகிறது. எனவே, பொதுமக்கள் இது குறித்துத் தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம், பயத்துடன் சிலிண்டர்களை முன் பதிவு(Panic Booking) செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வணிக ரீதியான எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில் சுமார் 70 சதவீதம் மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள் மற்றும் தொழிற்சாலை உணவகங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

we-r-hiring

ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், அவற்றையும் உடனடியாகக் கவனித்துத் தேவைக்கேற்பச் சேவையளிக்கத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவை எளிதாகக் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து, தொழிலாளர் குடியிருப்புகள் போன்ற இடங்களில் நேரடி விநியோகம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், உண்மையில் தேவையுள்ள எந்த ஒரு குடும்பமும் சமையல் எரிவாயு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

மாதம் சுமார் 2.5 லட்சம் சிலிண்டர் புக்கிங் பெறப்படுகிறது. வீட்டு உபயோக LPG விநியோகம் தங்கு தடையின்றி  முழுமையாக சீராக நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் தடையின்றி விற்பனை ஆகி வருகிறது. நகர்புற பகுதிகளில் 25 நாட்கள், கிராம புறங்களில் 45 நாட்கள் கழித்து சிலிண்டர் புக் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் 52 ஆயிரம் மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. 30 ஆயிரம் மெட்ரிக் டன் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலமும், மீதம் இருக்கும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் தனியார் நிறுவனங்கள் வழங்கப்படுகிறது.

வரக்கூடிய புகார்களை நாங்கள் உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, தனியார் நிறுவனங்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது, எங்கள் நிறுவனத்தில் பிரச்சனை வருகிறது என்றால் அதை கவனித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிறைய ஹோட்டல் நிறுவனங்கள் PNG(piped natural Gas) கேஸ் பயன்படுத்த முன் வந்துள்ளார்கள். போர் நிறுத்தம் நடைபெற்றால் கிராம புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் புக் செய்யப்படும் என்கிற நிலை மாறும்.புக்கிங் செய்யும் நாட்கள் குறைக்கப்படும் என்றார்.

ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…

MUST READ