விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது.
விருதுநகர், கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை அமர்வில் வழக்கறிஞர் கருணாநிதி முறையீடு செய்துள்ளாா். நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது.
தேர்தல் காலம் என்பதால் யாரும் அப்பகுதிக்கு சென்று பார்க்கவில்லை. உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளாா். அதற்கு நீதிபதிகள், “ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் தேவை. ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளனா்.

அரசுத்தரப்பில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. முதன்மைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்” என தெரிவித்தனா்.
அதையடுத்து நீதிபதிகள், ” இழப்பீடு வழங்குவது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
