Homeசெய்திகள்தமிழ்நாடுகொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்

கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்

-

- Advertisement -

சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில்  தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி பின் நிறைவு செய்கிறார்.கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சென்னையில் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு சென்னை மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், இன்று காலை சென்னை, அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக பேசினாா். அண்ணா நகர் டவர் பூங்கா பகுதியில் இருந்து வேட்பாளருடன் நடக்கத் தொடங்கி அந்த பகுதி மக்களிடமும், பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார். அப்போது பூங்காவில் இருந்தவர்கள் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சென்னை மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் பொதுமக்கள் வெள்ளத்தின் நடுவே நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் முதல்வர்.

we-r-hiring

தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜாவை ஆதரித்து அந்த பகுதியில் வியாபாரிகள், மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இன்று மாலை 6.30 மணி எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரசன்னாவை ஆதரித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகிலும், திரு.வி.க.நகர் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து மோதிலால் நேரு தெரு, டிமிலோஸ் ரோட்டிலும், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மஸ்ஜித், தட்டான்குளம் சூளையிலும், யானைகவுனி மேம்பாலம் அருகிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறாா்.

தொடர்ந்து துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து வால்டாக்ஸ் ரோட்டிலும், திமுக வேட்பாளர் சுபேர்கானை ஆதரித்து பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலும், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து சத்தியமூர்த்தி நகர் பாலம், வியாசர்பாடி அசோக்பில்லர், டிவிகே லிங்க் ரோடு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறாா்.

பின்னா், நாளை மதியம் 3 மணி வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்தும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, மேடவாக்கம் டேங்க் ரோடு, சோமசுந்தரம் 6வது தெரு, நெட்ட முத்தியல்கான் தெரு (என்.எம்.கே.தெரு), பட்டாச்சாரி தெரு, பரசுராம ஈஸ்வரன் கோவில் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை, ஐ.சி.எப். சிக்னல் அருகிலும் பிரச்சாரம் செய்ய உள்ளாா். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மேயர் சிட்டிபாபு பாலம், ஜம்புலிங்கம் மெயின் ரோடு, சிவஇளங்கோ ரோடு, பெரவள்ளூர் காவல் நிலையம், ஜவஹர் நகர் மெயின் ரோடு, சுந்தரராஜ பெருமாள் கோவில் தெருவில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். கொளத்தூர் தொகுதி பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கேயே தனது பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3 நாட்கள் சென்னையை முற்றுகையிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு – இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

MUST READ