Homeசெய்திகள்க்ரைம்திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

-

- Advertisement -

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.  வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள பிரம்மதேசம் எனும் கிராமத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்.  மாலை நேரத்தில் கடைக்கு செல்வதற்காக சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தினால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிய போது சிறுமி மயக்க நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்த போது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தெரியவந்தது.

we-r-hiring

இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது.  அதில், இந்த சம்பவம் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுப்புவதாகவும், இத்தகைய கொடூர குற்றங்களைத் தடுக்க வலுவான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் மோசமான மீறல் என்றும், இது பாதிக்கப்பட்டவருக்கு உடல், மன மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women ) கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்களில் உடனடி பொறுப்புணர்வு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு DGP-க்கு தேசிய பெண்கள் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பாக உடனடி FIR பதிவு செய்வதோடு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women) உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

MUST READ