Homeசெய்திகள்ஆவடி2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.  ஆச்சரியப்படும் வகையில் இந்த தொகுதியில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலேயான போட்டியாகவே களம் மாறியுள்ளதை விரிவாக பார்ப்போம்.

2026 தேர்தல் – ஆவடியில் 78.74% வாக்குகள் பதிவு – அதிகமாக விசில் சத்தம் கேட்கிறது…

we-r-hiring

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தில் மொத்தமாக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதன்படி ஆவடி தொகுதியில் திமுக சார்பில் சா.மு.நாசர் மற்றும் பாஜக சார்பில் ராஜசிம்ம மகேந்திரன் (எ) அஸ்வின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் ரமேஷ்குமார் என்பவரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புனிதா சண்முகம் என்பவரும்  போட்டியிட்டனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, பூவிருந்தவல்லி தொகுதியில் இருந்து பிரிந்து ஆவடி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தல் – ஆவடியில் 78.74% வாக்குகள் பதிவு – அதிகமாக விசில் சத்தம் கேட்கிறது…

ஆவடி சட்டமன்றத் தொகுதியின் முதல் தேர்தல் 2011ல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் அப்துல் ரஹீம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தாமோதிரன் என்பவர் போட்டியிட்டார். ஆவடி சட்டமன்றத் தொகுதியில் முதல் சட்டமன்ற உறுப்பினராக எஸ்.அப்துல்ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று  43,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரன் 66,864 வாக்குகள் மட்டுமே பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில்  71.81% ஆகும்.

அதனை தொடர்ந்து 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மாஃபா.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் நாசரை தோற்கடித்தார். ஆவடி நாசர் 1,06,669 வாக்குகளும், மதிமுக சார்பில் போட்டியிட்ட அந்திரிதாஸ் 22,848 வாக்குகளும் பாமக வேட்பாளர் ஆனந்தகிருஷ்ணன் 12,428 வாக்குகளும், பாஜக வேட்பாளர் லோகநாதன் 7,232 வாக்குகளையும் பெற்றார்கள். அப்போது பதிவான வாக்குகளின் சதவிகிதம் 68.62% ஆக பதிவானது.

2026 தேர்தல் – ஆவடியில் 78.74% வாக்குகள் பதிவு – அதிகமாக விசில் சத்தம் கேட்கிறது…

கடந்த 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசரும் அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும், இரண்டாவது முறையாக இருவரும் நேரடியாக மோதினார்கள். இதில் ஆவடி சா.மு.நாசர் 55, 275 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாண்டியராஜனை தோற்கடித்தார்.

2021 ஆம் ஆண்டில் வாக்காளர் திருத்த பட்டியல் (SIR) நடைபெறுவதற்கு முன் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,42,371 ஆக இருந்தது. ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 2,98,546 ஆகவே பதிவானது. இதில் பதிவாக வாக்குகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

தற்போது SIRக்கு பின் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுயில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,36,177. அதில், 3,43,460 வாக்குகள் பதிவாகின. இது 78.74 சதவீதமாகும். தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை சுமார் 3,500 ஆக பதிவாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தரவுகளின் படி வாக்காளா் திருத்தப் பட்டியலுக்கு முன் 73.45% வாக்காளர்களும் SIR -க்கு பின் 78.74 % என்பதில் பெரிய வேறுபாடு இல்லை.

தமிழ்நாடு முழுவதும் 4 முனை போட்டி என்றாலும், ஆவடி தொகுதியில் திமுகவிற்கும் தவெகவிற்குமான போட்டியாகவே களம் மாறியது.  முதல் முறை வாக்காளர்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் விசில் சின்னத்திற்கு ஆதரவாக இருந்ததை பார்க்க முடிந்தது.

2026 தேர்தல் – ஆவடியில் 78.74% வாக்குகள் பதிவு – அதிகமாக விசில் சத்தம் கேட்கிறது…

தவெக தலைவர் விஜய், நம்முடைய கழக தொண்டர்கள் (DRESS CODE) வெள்ளை சட்டை காக்கி பேண்ட் அணிந்து கொண்டு வாக்கு செலுத்தும் மையத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் சொன்னதை போன்று ஆவடியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆடை குறியீட்டை பார்க்க முடிந்தது.

அதோடு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே ஆவடியில் விசில் சின்னத்தின் பாதிப்பு எதிரொலித்தது.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுடைய பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் மாறிப் போனதை பார்க்க முடிந்தது.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தபோது,  நீங்கள் கண்டிப்பாக விசில் சின்னத்திற்கு தான் ஓட்டு போட்டிருப்பீர்கள் என்று கேட்டதற்கு, எங்கள் குடும்பத்தில் மொத்தம் 20 வாக்குகள் இருக்கிறது, ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக அனைவருமே விசில் சின்னத்திற்கு தான் வாக்களித்தார்கள் என்று உற்சாகத்துடன் கூறினாா். நானும் அதற்கு தான் வாக்களிக்க போகிறேன் என்று கூறி என்னை நிறுத்தத்தில் இறக்கிவிட்டு  சென்றார்.

அதே போன்று என்னோடு பணியாற்றும் தோழி சொன்னது என்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. அவள் வீட்டில் 30 பேர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் இதற்கு முன் நடந்த அனைத்து தேர்தல்களிலும்  உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்களித்தனர் என்றும், ஆனால் இந்தமுறை அவர்கள் குடும்பத்தில் இளம் வாக்காளர்கள் 10 பேரின் பேச்சை கேட்டு அனைவருமே விசில் சின்னத்திற்கு வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.2026 தேர்தல் – ஆவடியில் 78.74% வாக்குகள் பதிவு – அதிகமாக விசில் சத்தம் கேட்கிறது…

இப்படி பாரம்பரிய திமுக ஓட்டுகளையும் விஜய் உடைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

அதேபோன்று அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதால் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க விரும்பவில்லை. அவர்களும் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை அறிந்துக்கொள்ள முடிந்தது.

ஆவடி தொகுதியில் விஜய்யின் விசில் சத்தத்தில் உதயசூரியன் மறைந்ததா அல்லது உதயசூரியன் வெப்பத்தில் விசில் காணாமல் போனதா என்பது மே – 4ல் தெரியவரும்.

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

MUST READ