தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2 ½ ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2021ம் ஆண்டு தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 9 வயது மற்றும் 10 வயது சிறுமிகள், கடந்த 18.08.2021 அன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 58 வயதுடைய எதிரி மேற்படி 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் தாயார் W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய 58 வயது (2021) எதிரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற விசாரணை முடிவடைந்து நேற்று (25.04.2026) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 58 வயதுடைய (2021ம் ஆண்டு) குற்றவாளிக்கு 2½ ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
