அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டும் வழக்குப்பதியவில்லை என இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் கொண்ட அமா்வு, வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தள்ளிவைக்கப்பட்டது.
பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி – அமைச்சர் கே.என்.நேரு

