வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.
மே நான்காம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை சிஆர் பி எப் வீரர்கள் தமிழக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர், சென்னை தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனா்.
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்

