Homeசெய்திகள்மாவட்டம்தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

-

- Advertisement -

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

we-r-hiring

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு செல்வதற்கு வசதியாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று மாலை ஆறு மணி முதல் பல்வேறு தென் மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மதுரை, திருச்சி, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 10 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 210 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ள நிலையில் ஏழாம் தேதி மாலை 6 மணி வரை தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள 77 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

MUST READ