அதிமுகவின் விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே முழு அதிகாரமும் உள்ளது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முழு அதிகாரம் உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் உள்கட்சி அதிருப்தி வெளிப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், அதிமுக விதிமுறைகள் (List of general secretaries of the All India Anna Dravida Munnetra Kazhagam) படி, நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளருக்கே கட்சியை வழிநடத்தவும், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முழு அதிகாரம் உள்ளதாக கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும், “பதவிக்காக ஆசைப்பட்டு கழகத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைக்க வேண்டாம்” என்றும் அவர் அதிருப்தி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!
