Homeசெய்திகள்தமிழ்நாடுவீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் - அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

-

- Advertisement -

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் - அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி ரேஷன் பொருட்களை பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேவையான நிதி கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் உறுதியளித்தார்.

”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…

we-r-hiring

MUST READ