Homeசெய்திகள்அரசியல்"பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை.." - திருமாவளவன் விளக்கம்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

-

- Advertisement -

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்."பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை.." - திருமாவளவன் விளக்கம்தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். “பதவி ஆசையால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை, அரசியல் சூழ்நிலைகளே காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அவர்களின் கருத்தை மதித்து முடிவு எடுத்ததாக கூறினார். அதே நேரத்தில் தனிப்பட்ட பதவி ஆசை காரணம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், தவெக தரப்பில் இருந்து வெளிப்படையாகவே அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அமைச்சரவையில் இணைவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகவும் திருமாவளவன் கூறினார். அரசியல் நெருக்கடி சூழ்நிலை இருந்தபோதும், முடிவு அவசரமாக எடுக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.

we-r-hiring

இந்த முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் க்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் இசைவுடனும் வாழ்த்துகளுடனும் செயல்பட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் இந்த சூழ்நிலையை அணுகியதாக அவர் பாராட்டினார். தானே அமைச்சராக வேண்டும் என சில கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தாலும், அந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கட்சி மற்றும் கூட்டணி நலனையே முன்னிலைப்படுத்தி முடிவு எடுத்ததாகவும் திருமாவளவன் கூறினார்.

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

MUST READ