Homeசெய்திகள்சென்னைதவெக நிகழ்ச்சியில் எச்சில் இலை அள்ளிய தூய்மைப் பணியாளர்கள்" - முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை...

தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலை அள்ளிய தூய்மைப் பணியாளர்கள்” – முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின் போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நயினார் நாகேந்திரன்

we-r-hiring

​கண்ணியத்தை மிதிக்கும் செயல்:
​”சென்னை மதுரவாயல் தவெக எம்எல்ஏ அலுவலகத் திறப்பு விழாவின் போது, அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது.
​நம் சமூகத்தைச் சுத்தமாக வைத்திருக்க அரும்பாடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இந்தச் செயலைத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
​தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது, தமிழக முதல்வரும் தவெக தலைவருமான திரு. விஜய் அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயமரியாதையைப் பாதுகாக்க வழிமுறை தேவை:
​எதிர்காலத்தில் இத்தகைய இழிவான நிகழ்வுகள் மீண்டும் தொடராத வண்ணம், தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க தவெக அரசு உறுதியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
​இவ்வாறு பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

MUST READ