Homeசெய்திகள்கட்டுரைவைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

-

- Advertisement -

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா

அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்த மதிமுகவின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா, அண்மையில் வழங்கிய ஊடக நேர்காணல் ஒன்றில் மதிமுகவின் உள்விவகாரங்கள் மற்றும் வைகோவின் அரசியல் நகர்வுகள் குறித்த பல அதிரடி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். வைகோவின் அதிகார ஆசை, திமுக மீதான வன்மம், வாரிசு அரசியல் மற்றும் உட்கட்சி ஜனநாயகப் படுகொலை எனப் பல தளங்களில் மல்லை சத்யா முன்வைத்துள்ள விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

we-r-hiring

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

திமுக தலைமையைக் கைப்பற்றத் துடித்த வைகோ
​தொடக்கக் காலத்தில் வைகோவின் முதன்மை நோக்கமாக இருந்தது திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதுதான் என்பதை மல்லை சத்யா உடைத்துக் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் உச்சபட்ச அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்று வைகோ கணக்கு போட்டிருந்தார். ​இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் பொறுமை காக்குமாறு அறிவுறுத்தியபோது, வைகோ சலிப்புடன், “இன்னும் எத்தனை நாளைக்கு காத்துட்டு இருப்பது, அவர் ஒன்னும் போவது மாதிரி தெரியல” என்று கலைஞரைக் குறித்துப் பேசியதாக சத்யா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் பேராசை மற்றும் அதிகார வேட்கை நிறைவேறாத விரக்தியில்தான், திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு அவர் மதிமுகவைத் தொடங்கினார் என்று மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.

​தொண்டர்களைத் தடுக்கவே திமுக கூட்டணிப் பாசம்!
​1996 தேர்தலில் வைகோவின் வியூகங்களை முறியடித்து திமுக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது முதல், மதிமுக தனித்துப் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளையே சந்தித்தது. இந்தச் சூழலில், கொள்கைப் பற்றுள்ள மதிமுக தொண்டர்கள் மாற்று அரசியலை நோக்கி அதிமுகவிற்கோ அல்லது பாஜகவிற்கோ செல்ல விரும்ப மாட்டார்கள்; மாறாக, தங்கள் தாய் கழகமான திமுகவிற்கே மீண்டும் திரும்புவார்கள் என்ற அரசியல் உளவியலை வைகோ நன்கு அறிந்திருந்தார். ​தொண்டர்கள் அவ்வாறு திமுகவிற்குச் செல்வதைத் தடுத்து, தன் வசமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வைகோ தொடர்ந்து திமுக கூட்டணியை விட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டிருந்தார் என்று மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

​”வாடகைக்கு விடப்பட்ட” வேட்பாளர்கள் & வாரிசு அரசியல்
​2021 சட்டமன்றத் தேர்தலை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சத்யா சுட்டிக்காட்டியுள்ளார். அத்தேர்தலில் மதிமுகவின் 6 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இதனை விமர்சித்த அவர், வைகோ தங்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்துச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, “வாடகைக்கு விட்டுச் சென்றதாக” கடுமையாகச் சாடியுள்ளார். ​மேலும், திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் மதிமுக என்ற கட்சியே உருவானது. ஆனால், இன்று தனது சொந்தக் கொள்கையையே காற்றில் பறக்கவிட்டு, தனது மகன் துரை வைகோவை வைகோ அரசியலுக்குக் கொண்டு வந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறு வயது முதலே கட்சிக்காக உழைத்து படிப்படியாக இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். ஆனால், துரை வைகோ 50 வயது வரை சொத்துக்களைச் சேர்த்துவிட்டு, திடீரென அரசியலுக்கு வந்து தலைமைப் பொறுப்பை ஏற்பதா? என்று மல்லை சத்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

​உட்கட்சி ஜனநாயகப் படுகொலை
​மதிமுகவின் வீழ்ச்சிக்குக் கட்சியின் உள்ளே நிலவும் ‘அறிவிக்கப்படாத அவசர நிலை’ மற்றும் ஜனநாயகப் படுகொலைதான் காரணம் என மல்லை சத்யா குற்றம் சாட்டுகிறார். துரை வைகோவின் அரசியல் வருகைக்காக நடத்தப்பட்ட உட்கட்சி வாக்கெடுப்பு, கடைசி நிமிடம் வரை தங்களுக்குத் தெரியாமல் மிக இரகசியமாக நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். ​வைகோவின் இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்கைப் புரிந்துகொண்டதால்தான் கட்சியின் மூத்த முன்னோடிகள் பலர் மதிமுகவை விட்டு வெளியேறினர். அவ்வாறு அதிருப்தியில் வெளியேறி திமுகவில் இணைய முயன்ற நிர்வாகிகளைக் கூட, வைகோ தனது கூட்டணிக் காரணங்களைக் காட்டி, திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தினார் என்ற அதிரடித் தகவலோடு மல்லை சத்யா தனது நேர்காணலை நிறைவு செய்துள்ளார்.

கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!

MUST READ