Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!" – வெளுத்து வாங்கிய...

தவெக சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!” – வெளுத்து வாங்கிய டிகேஎஸ் இளங்கோவன்!

-

- Advertisement -

த.வெ.க சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!" – வெளுத்து வாங்கிய டி.கே.எஸ்.இளங்கோவன்!
“தற்போதைய தவெக அரசாங்கம் என்பது வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சிதானே தவிர, சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் த.வெ.க அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். ​சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், த.வெ.க அரசின் செயல்பாடுகள் மற்றும் கரூர் விவகாரம் குறித்துப் பேசினார்.

​”சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல!”

we-r-hiring

த.வெ.க அரசின் ஓராண்டு செயல்பாடு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த ஆட்சி வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி மட்டுமே. இதில் எவ்வித சமூக மாற்றமும் நிகழவில்லை. முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களுக்குப் பெயர்களை மாற்றிவிட்டு, ஏதோ இவர்கள் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது போலப் பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.

​இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கினால், தற்போது விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுமக்களும் இந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களைத் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். இவர்களால் ஒருபோதும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இணைய முடியாது.”

​பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து:

​”நாங்கள் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகவே இருப்போம். பாஜக-விற்கு எதிரான மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து கைகோர்த்து, எங்கள் கருத்துக்களைத் தேச அளவில் வலுவாகப் பதிவு செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

த.வெ.க சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!" – வெளுத்து வாங்கிய டி.கே.எஸ்.இளங்கோவன்!
​கரூர் விவகாரம்: “திமுக மீது பழி சுமத்தச் சதி!”

“அன்று கரூரில் பிரச்சினை நடந்தபோது, அங்கிருந்து முதலாவதாக ஓடி வந்தவர்தான் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைக்குச் சென்று ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்ல துப்பற்றவர்கள், இன்று தங்கள் தோல்வியை மறைக்க திமுக மீது பழி சுமத்துகிறார்கள்.

முதலமைச்சர் கரூருக்குச் செல்லக் கூடாது என்று திமுக எப்போதும் தடுக்கவில்லை. அவர் கரூர் செல்லக் கூடாது என்று தடை விதிக்கக் கோரி திமுக நீதிமன்றத்திற்கும் செல்லவில்லை. இதில் திமுக-தான் சதி செய்தது என்ற ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டு முயல்கிறார்கள்.

அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா பொதுவெளியில் திமுக-விற்கு எதிராகப் பேசிய அவதூறு பேச்சுக்கு எதிராக மட்டும்தான் திமுக சட்டப்படி நீதிமன்றத்தை நாடியதே தவிர, இவர்களின் அரசியல் நகர்வுகளைத் தடுக்க அல்ல” என்று டி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

MUST READ