spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

-

- Advertisement -

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி-  சுபாம்பி தம்பதியினர் இவர்களுக்கு  ஒன்பது வயது ரஹிம் என்ற மகன் உள்ளார். இஸ்லாம் பேட்டையில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் வேலை செய்யும் சுபாணி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

we-r-hiring

இந்த பிரச்சனைக்கு  தீர்வு காண நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலையத்திற்கு சென்றான். அங்கு பணியில் இருந்த போலீசார்  எதற்காக காவல் நிலையம் வந்தாய் என கேட்டதற்கு என்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து எங்க அம்மாவை அடித்து துன்புறுத்துகிறார்.

அடிக்க வேண்டாம் என்று என் தாய் கெஞ்சி கேட்டாலும் எங்க அப்பா எங்க அம்மாவை விடுவதில்லை.

எனவே என் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவன் கூறினான். உடனடியாக ரஹீம் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர் இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கலந்தாய்வு செய்து மீண்டும் இதுபோன்று நடந்து கொள்ள கூடாது என சுபானியை கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

MUST READ