Homeசெய்திகள்மாவட்டம்நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!

நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!

-

- Advertisement -

நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் தர மறுத்த விவசாயி ஒருவரை இடைத்தரகர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்

we-r-hiring

​விளம்பரம் ஒருபுறம்; கள நிலவரம் மறுபுறம்
​சோழவந்தான், ஊத்துக்குளி, தென்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் எவ்விதத் தடையுமின்றி, இடைத்தரகர்களின் தலையீடின்றி நேரடியாக விற்பனை செய்யலாம்” என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
​இந்த அறிவிப்பை நம்பி, ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் என்பவர், தனது 10 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக நாராயணபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அராஜகத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்கள்
​நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற விவசாயி ராமலிங்கத்திடம், அங்கிருந்த இடைத்தரகர்கள் நெல் மூட்டை ஒன்றுக்கு தலா 55 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, அரசு நிர்ணயித்துள்ள 41 கிலோ எடையைத் தாண்டி, கூடுதல் எடையையும் நெல்லாகக் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

அரசின் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டு, பகல் கொள்ளையடிக்கும் இடைத்தரகர்களின் இந்த அராஜகச் செயலை விவசாயி ராமலிங்கம் தைரியமாகத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இடைத்தரகர்கள், விவசாயி ராமலிங்கத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார்:
இடைத்தரகர்களின் இந்த திடீர் தாக்குதலால் காயமடைந்த விவசாயி ராமலிங்கம், உடனடியாகச் சோழவந்தான் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னைத் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

​விவசாயிகள் வேதனை & கோரிக்கை
​”விவசாயிகளைக் காப்போம் என அரசு உறுதி அளித்த போதிலும், களத்தில் இடைத்தரகர்களின் அராஜகமும் லஞ்ச வேட்டையும் இன்னும் ஓயவில்லை” எனப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அரசு கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நீடிக்கும் இத்தகைய ஊழல்களையும், இடைத்தரகர்களின் தலையீட்டையும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இச்சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் உடனடியாகக் தலையிட்டு, கொள்முதல் நிலையங்களில் முறைகேடற்ற வெளிப்படையான விற்பனையை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

MUST READ