Homeசெய்திகள்க்ரைம்எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு - இருசக்கர...

எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

-

- Advertisement -

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு - இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமா (65). இவர், எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலை ரமா தனது வேலைக்காகச் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

we-r-hiring

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், ரமா அணிந்திருந்த கவரிங் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அலறினார்.

போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை அடையாளம் காண, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்
காசா மேஜர் சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட மற்றும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். இத்தகைய முக்கிய சாலையில், பகல் நேரத்திலேயே மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய போலி மந்திரவாதிகள் கைது!

MUST READ