Homeசெய்திகள்ஆவடிஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!

ஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!

-

- Advertisement -

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு வியாபாரி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த ஒரு ஆண்டாக வசித்து வருபவர் அமீர். இவர் வெளிநாடுகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அமீரின் வீட்டிற்கு வந்த ஐந்து பேர்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக அமீரின் வீட்டில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

முதற்கட்டத் தகவலின்படி, ஆந்திராவில் பதிவான போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய விசாரணைக்காகவே அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணையின் முழுமையான முடிவிலேயே கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

இந்த திடீர் சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட பாதுகாப்புப் பணிகளில் ஆவடி காவல் துறை போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை வேளையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தியுள்ள இந்த அதிரடி சோதனை அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

வேல் வடிவில் நின்று 225 மாணவிகள் பரதநாட்டிய உலக சாதனை: சென்னை அம்பத்தூரில் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

MUST READ