
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 138 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ளது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!
பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாளை (மே 13) காலை 10.00 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
“ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன்”- முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி!
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “கர்நாடகா மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய மக்களின் சக்தி வென்றுள்ளது. கர்நாடகத் தேர்தலில் முதலாளித்துவவாதிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. சேவை செய்ய, எங்களுக்கு வாய்ப்பளித்த கர்நாடக மாநில மக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.