

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்- 2’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வெளியாகி, பல கோடி ரூபாய் வசூலானது. இந்த படத்தில் பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
உலகம் முழுவதும் மொத்தம் ரூபாய் 300 கோடி வசூலாகியுள்ளதாக லைகா நிறுவனம் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம், வெளிநாட்டு முதலீடு மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாயை முறையாக கணக்கு காட்டவில்லை உள்ளிட்டவைத் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், இன்று (மே 16) காலை முதலே சென்னையில் தியாகராய நகர் மற்றும் அடையாறு உள்ளிட்ட லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு குழுவாகப் பிரிந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?- தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்!
கடந்த 2014- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது லைகா திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், சூர்யா, விஜய் ஆகியோரை வைத்து பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.