2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) செய்த தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட செலவுக் கணக்கு விவரங்கள்
விளம்பரங்களுக்கு அதிக செலவு
அதிமுகவின் மொத்தத் தேர்தல் செலவான ரூ. 109,61,81,982-இல் பெரும்பகுதி ஊடக விளம்பரங்களுக்கே செலவிடப்பட்டுள்ளது.

நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கட்சித் தேர்தல் விளம்பரங்களைச் செய்வதற்காகப் பிரமானியா நிறுவனத்திற்கு மட்டும் ரூ. 103 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 490 வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பயணச் செலவுபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கு ரூ. 1,75,000 செலவிடப்பட்டுள்ளது. அவரது பிரச்சார வாகனத்திற்கான டீசல் செலவாக ரூ. 4,14,741 கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
நட்சத்திரப் பேச்சாளர்கள்: அதிமுக சார்பில் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்த நட்சத்திரப் பேச்சாளர்களின் செலவினங்களுக்காக ரூ. 17,37,000 செலவிடப்பட்டுள்ளது.
கூட்டங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் செலவுகூட்டங்கள் மற்றும் பேரணிகள்:
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பேரணிகளுக்காக ரூ. 1 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 266 செலவாகியுள்ளது.
தேர்தல் பொருட்கள்: கட்சித் தேர்தல் அறிக்கை புத்தகங்கள் அச்சிடுதல், துண்டுப் பிரசுரங்கள் (நோட்டீஸ்கள்), கட்சிக் கொடிகள் மற்றும் பேனர்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசாரப் பொருட்களுக்கு ரூ. 4 கோடியே 11 லட்சத்து 36 ஆயிரத்து 582 செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த செலவு:
அதிமுக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள கணக்கின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அக்கட்சி செய்துள்ள மொத்தச் செலவு ரூ. 109 கோடியே 61 லட்சத்து 81 ஆயிரத்து 982 (ரூ. 109.61 கோடி) ஆகும்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடு: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு!
