spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்வியூகம் வகுத்த காங்கிரஸ்.... பெங்களூருவில் அணிதிரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!

வியூகம் வகுத்த காங்கிரஸ்…. பெங்களூருவில் அணிதிரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!

-

- Advertisement -

 

வியூகம் வகுத்த காங்கிரஸ்.... பெங்களூருவில் அணிதிரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!
File Photo

கர்நாடகாவில் சித்தராமையா மாநிலத்தின் முதலமைச்சராக நாளை (மே 20) பதவியேற்கவுள்ள விழாவுக்கு பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை அணி திரள செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

we-r-hiring

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

பதவியேற்பு விழாவில், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கும் முக்கிய நிகழ்வாக இது உள்ளது.

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!

அடுத்த 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, எதிர்க்கட்சிகள் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இதில், மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, ஓரணியில் திரண்டு பா.ஜ.க.வை வீழ்த்துவது உள்ளிட்டவைகளைக் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

MUST READ