spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!

“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!

-

- Advertisement -

 

"ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்"- ராகுல் காந்தி பேச்சு!
Photo: ANI

இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

we-r-hiring

கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “கர்நாடக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பணம் மற்றும் அதிகாரப் பலத்தைத் தாண்டி, காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்தனர். இனி மக்களுக்கு நல்ல காலம்.

கர்நாடகா அமைச்சர்கள் பதவியேற்பு!

பெண்கள் இனி பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். தேர்தல் வாக்குறுதிப்படி, கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும். ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் கட்சித் தரப் போகிறது” எனத் தெரிவித்தார்.

MUST READ