- Advertisement -
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி தீபம் ஏற்றப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தீபம் ஏற்றுவது தொடர்பான பாரம்பரிய நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
