Homeசெய்திகள்மாவட்டம்ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – இளைஞர் பலி; 4...

ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – இளைஞர் பலி; 4 பேர் படுகாயம்!

-

- Advertisement -

சேலம் மாவட்டம், ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச் சுவரைத் தாண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – இளைஞர் பலி; 4 பேர் படுகாயம்!

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சபரீஷ் (26), ஜீவா (26), பாலாஜி (47), தேவன் (55), அழகேசன் (47) ஆகிய ஐந்து பேரும் நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர், ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக காரில் சென்றுள்ளனர்.

அப்போது குப்பனூர் மலைப்பாதையில் வாணியாறு பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அருகிலுள்ள கிராம மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரில் சிக்கியிருந்த ஐந்து பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சபரீஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற நான்கு பேருக்கும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வருகை குறைவு – பருவமழை பொய்த்ததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

MUST READ