Homeசெய்திகள்தமிழ்நாடுமின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – TNPDCL அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – TNPDCL அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் இறப்புக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வெளியிட்டுள்ளது.மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – TNPDCL அறிவிப்பு!

இந்த உயர்வு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2026 நவம்பர் 20ஆம் தேதி வரை ஓய்வு பெற்ற அல்லது உயிரிழந்த தகுதியான ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட பணிக்கொடைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகுதியுடைய மின்வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதிய மற்றும் இறப்புக்காலப் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் – மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது மாநில நெடுஞ்சாலை ஆணையம்!

MUST READ