Homeசெய்திகள்சென்னைமீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் கண்டனம்!

மீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் கண்டனம்!

-

- Advertisement -

காசிமேட்டில் நான்கு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மீனவர்களின் போராட்டத்தைத் தீய சக்திகளின் தூண்டுதல் எனக் குறிப்பிட்ட மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் கண்டனம்!

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவர் நேரில் சென்றார். அப்போது, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அவர் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், மீனவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவர்கள் கேட்டுள்ள நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரூ.20 லட்சம் என்பது தமிழக அரசுக்கு பெரிய தொகை கிடையாது என்றும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆறு மாதங்களாகப் படகு சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விடுவிக்க ஆந்திர அரசு ஏன் தயங்குகிறது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

நான்கு நாட்களாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் நேரில் வந்து அவர்களைச் சந்தித்து பிரச்சினைக்குத் தீர்வு காணாதது வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் தீய சக்திகளின் தூண்டுதலால் செயல்படுவதாக அமைச்சர் கூறியிருப்பது தவறானது என்றும், ஒருவர் தனது கோரிக்கைக்காகப் போராடினால் அதற்குப் பின்னால் தீய சக்திகள் இருப்பதாக எப்படிக் கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டித்த அவர், உடனடியாக மீனவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்கும் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால், அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருப்பதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

MUST READ