Homeசெய்திகள்சென்னைதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக நில அளவை கல்லில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்த உத்தரவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், கூட்டாட்சி முறையின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உச்சநீதிமன்றம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகக் கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கில் எதிர்தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகார் – நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல்

MUST READ