
சென்னையை அடுத்த ஆவடி அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!
அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடையால், ரயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணிக்கக் கூடிய சாலையில் செயல்படும் மதுபான கடையை அகற்ற மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மதுபானத்தை வாங்கிக் கடை முன்பு உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, “தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக, 87, 85 எண்களைக் கொண்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.