
பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி, மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நமது நாட்டின் பெருமை என்று கருதப்படும், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெறுவது இளைஞர்களின் கனவாக இருந்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு தற்போது பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.
கடந்த 2014- ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் 16.9 லட்சமாக இருந்த வேலை வாய்ப்பு, 2022- ஆம் ஆண்டு 14.6 லட்சமாகக் குறைந்துள்ளது. பிஎஸ்என்எல், செயில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்களில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என வாக்குறுதிக் கொடுத்தவர்கள், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வேலை விட்டு நீக்கியுள்ளனர்.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- எங்கெங்கு எவ்வளவு மழை?
இது மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இது இடஒதுக்கீடு உரிமையை மறுப்பதா? அல்லது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கான சதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.” இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


