spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து"- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

-

- Advertisement -

 

"சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து"- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!
Photo: ANI

மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன. இதையடுத்து, கரக்பூர்- பங்குரா- ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொலைத்தூர ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

we-r-hiring

“சந்திராயன்- 3 விண்ணில் ஏவப்படுவது எப்போது?”- இஸ்ரோவின் முக்கிய அறிவிப்பு!

ரயில் விபத்து காரணமாக, 14 ரயில்களின் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள தென்கிழக்கு ரயில்வே, “சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால், சரக்கு ரயில் பராமரிப்பு ரயில் மீது மீது மோதி தடம் புரண்டது. பராமரிப்பு ரயிலைத் தடம் மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சரக்கு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நடைபெற்ற விபத்தில் சுமார் 8 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

தண்டவாளத்தில் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை ரயில்வேத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தும், விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

MUST READ