
மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலமும், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரைன், டோலா சென், பிரதீப் பட்டாச்சாரியா, சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட ஒன்பது பேரின் பதவிக்காலமும், வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
கோவா பா.ஜ.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினய் டெண்டுல்கரின் பதவிக் காலம் வரும் ஜூலை 28- ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24 – ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினமே மாலை 05.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கும், குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கும், கோவாவில் ஒரு மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.