spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!

பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!

-

- Advertisement -

 

பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!
Photo: ANI

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, மணிப்பூர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

we-r-hiring

துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குனர்!

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 55 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடிக்கும் நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கும், கலவரத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கவும் ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணுபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் அனுமதி பெற்றே ராகுல் காந்தி மணிப்பூர் சென்றிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்…… போஸ்டருடன் வெளியானது TTF வாசன் நடிக்கும் படத்தின் தலைப்பு!

இதையடுத்து ராகுல் காந்தி மீண்டும் இம்பாலுக்கு திரும்பியுள்ளார். இதனிடையே பேசிய ராகுல் காந்தி, “கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ