மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பினுலால் சிங் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் ராகுல்காந்தி மக்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து, அமைதி திரும்ப போராடிக் கொண்டிருக்கிறார் எனவும், ஆனால் பிரதமரோ , அமைச்சர்களோ மணிப்பூரில் ஏற்படும் உயிர் சேதங்களை பார்வையிடவோ நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டி பேசினார்.